"இறுதியாக அமைதி" மறைந்த 3வது கணவருக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்திய நடிகை வனிதா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். அருண் விஜயின் மூத்த சகோதரியான இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த இவர் 2000 ஆவது ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்த திருமண உறவு 5 வருடங்களை நீடித்த நிலையில் இருவரும் 25 ஆம் ஆண்டு பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஆஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்தார் வனிதா. இந்த திருமணமும் நீடிக்காத நிலையில் 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததாலேயே பீட்டர் பால் என்ற பெயர் தமிழகத்தில் பிரபலமானது. இவர்களது திருமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் பீட்டர் பாலின் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தின் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீட்டர் பால் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பெயரை குறிப்பிடாமல் ட்விட்டர் மூலம் இரங்கல் செலுத்தி இருக்கிறார் வனிதா விஜயகுமார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர் 'நீங்கள் இந்த உலகத்தை விட்டு பிரிந்ததற்காக நான் வருத்தமாக உணர்கிறேன், கண்டிப்பாக நீ இதைவிட நல்ல இடத்தில் தான் இருப்பாய், இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது. எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The actress paid tribute to her late third husband on Twitter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->