தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கிய காட்சி நீக்கம்!
The Kerala Story Sensor cut
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், திரைப்படத்தில் முக்கிய காட்சி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பொய்யான ஒரு கட்டமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
அதே சமயத்தில் கேரள மாநிலத்தில் உண்மையில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, நாடு கடத்தி அவர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதாக ஒரு பக்கம் வாதம் வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த காணொளிகளையும் திரைப்படத்திற்கான ஆதரவாளர்கள் வெளியிட்டு வரும் நிலையில், திரைப்படத்திற்கு கடுமையான கட்டணங்களை தெரிவிப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இந்த படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய 10 காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் நீக்கி உள்ளனர்.
அதில் குறிப்பாக "அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாக மாறும்" என்று, கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் அளித்த பேட்டியை நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்து கடவுள்கள் குறித்த சில வசன காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
English Summary
The Kerala Story Sensor cut