சினித்துறையில் 13 ஆண்டுகளைக் கடந்த சமந்தா.! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா திமிழ் திரை உலகில் அறிமுகமான சமந்தா, பானாகாத்தாடி, நான்ஈ, நீதானே என் பொன்வசந்தம், தெறி, மெர்சல், சீமராஜா, யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையே சமந்தா கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதண்யாவை திருமணம் செய்து கொண்டு, பின்னர் கருத்து வேறுபாட்டினால், இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதற்கெல்லாம் அச்சப்படாத சமந்தா தொடர்ச்சியாக தனது திரைப்பயணத்தை தொடந்தார்.

சமீபத்தில், இவர் அரிய வகை நோயான மயோசிடிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் குணமடைதல் என்றும் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா திரை உலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறை பெற்றுள்ளதால் டுவிட்டரில் #13PhenomenalYrsOfSamantha எனும் ஹேஷ்டாக் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இது தொடர்பாக சமந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"இந்த அன்பை நான் உணர்கிறேன்... அதுதான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது... இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவின் இந்த ட்விட் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirteen years of samantha on ciniema field


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->