தாறுமாறாக வெளியான துணிவு பட பாடல்.. அதற்குள் இத்தனை லைக்ஸா.?!
Thunivu 1st single chilla Chilla released
நடிகர் அஜித் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இதே கூட்டணி தொடர்கிறது.
அஜித்தின் AK61 என்று குறிப்பிடப்பட்ட திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.,
இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
"துணிவு" என பெயரிடப்பட்டுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று சரியாக மாலை 5 மணிக்கு அனிருத் குரலில் சில்லா சில்லா பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு பாடலை 06.30-க்கு வெளியிட வுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில், அனிருத் குரலில் செம்மையாக பாடல் வெளியாகியுள்ளது.வெளியான சில மணித்துளிகள் 40000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
English Summary
Thunivu 1st single chilla Chilla released