போனி கபூர் கொடுத்த துணிவான அப்டேட்..!! அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!!
Thunivu movie first single song releases on Dec9
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். துணிவு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்கள் பலரும் துணிவு படத்தின் அடுத்த அப்டேட் எப்பொழுது வரும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
நேற்று வெளியான வாரிசு திரைப்படத்தின் பாடல் இணையத்தில் வைரலானது. இதனால் துணிவு படத்தின் அப்டேட் இல்லாமல் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்த நிலையில் துணிவு பணத்தின் முதல் பாடலான "சில்லா சில்லா" பாடல் எப்பொழுது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் துணிவு படத்தின் முதல் பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வைசாக் எழுதி அனிருத் பாடியுள்ள "சில்லா சில்லா" பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துணிவு படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
Thunivu movie first single song releases on Dec9