லாக்டவுனால் மீண்டும் தள்ளிப்போகும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


லண்டனில் லாக்டவுனால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென விஷால் மற்றும் மிஸ்கின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு, இந்தப் படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகராமல் அப்படியே உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என அவர் அறிவித்திருந்தார். ஆனால், ஓமிக்ரான் வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால், மறுபடியும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thupparivalan 2 shooting postponed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->