கச்சத்தீவை மீட்க சட்டசபையில் தீர்மானம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்!
Katchatheevu mk stalin TN Govt Assembly Central govt PM Modi
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் முன்மொழிந்தார்.
தீர்மானத்தில் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், இலங்கை கடற்படையின் தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றிலுமாக ஒழிக்கவும், கச்சத்தீவை மீண்டும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே நிரந்தர தீர்வாக இருக்கும்.
இதற்காக இந்திய-இலங்கை இடையிலான 1974 ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம், இலங்கைக்கு அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசுடன் பேசி, சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
Katchatheevu mk stalin TN Govt Assembly Central govt PM Modi