குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார்...உடனடியாக துரித நடவடிக்கையில் இறங்கிய MLA!
Complaints of sewage mixing with drinking water The MLA acted swiftly
உருளையன்பேட்டையில் குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவதாக அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்களிடம் முறையிட உடனடியாக துரித நடவடிக்கையில் இறங்கினார்.
புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி, லூயி பிரகாசம் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் இதனால் மக்களுக்கு பல நோய்கள் வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. எதிர் வரும் காலம் கோடை காலம் என்பதால் மக்கள் அதிகம் குடிநீர் உபயோகிக்கும் போது அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. இரா. சிவா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
அதனை தொடர்ந்து இன்று உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் மூலமாக பொதுப்பணி துறை செயற்பொறியாளர் திரு. உமாபதி அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திருமிகு. இரா. சிவா அவர்களின் கடிதம் வழங்கப்பட்டது.
உடனடியாக செயற்பொறியாளர் திரு. உமாபதி அவர்கள், உதவி பொறியாளர் திரு. அன்பரசன், இளநிலை பொறியாளர் திரு. வெங்கடேசன், மற்றும் மேற்பார்வையாளர் திரு. கணேசன் ஆகியோரை அழைத்து உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்யுமாறு ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு குடிநீரில் கழிவுநீர் கலக்கு இடத்தை கண்டறிந்து சரிசெய்யும் பணியினை மேற்கொண்டனர்.அப்போது கிளைச்செயலாளர் கிரி, தொகுதி செயற்குழு உறுப்பினர் நெல்சன், சொல்தா ரவி, ராஜா, ராமலிங்கம், வெங்கடேசன், விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary
Complaints of sewage mixing with drinking water The MLA acted swiftly