தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாநகராட்சி!
Namakkal tn 1st place
தமிழ்நாட்டில் உள்ள 24 மாநகராட்சிகளில் சொத்து வரி வசூலில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாமக்கல், தொடக்கத்தில் 22-வது இடத்தில் இருந்தது. எனினும், கடந்த நவம்பர் முதல் மார்ச் 31 வரை சொத்து வரி வசூலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. மாநகராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.14.74 கோடி வசூல் இலக்கை எட்டியதால், மத்திய நிதிக்குழு மானியத் தொகையையும் பெற தகுதி பெற்றுள்ளது.
மேலும், பாதாள சாக்கடை கட்டணம், வரியில்லா இனங்கள், குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, திடக்கழிவு சேவை கட்டணம் உள்ளிட்ட அனைத்து இனங்களிலும் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது.
இந்த சாதனையை நிகழ்த்திய பொது மக்கள், மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.