குழந்தை இலக்கியப் படைப்பாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


தேவதைக் கதைகள் எழுதி உலகப் புகழ் பெற்ற குழந்தை இலக்கியப் படைப்பாளர் திரு.ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் அவர்கள் பிறந்ததினம்!.

 குழந்தை இலக்கியப் படைப்பாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (HANS CHRISTIAN ANDERSEN, ஏப்ரல் 02, 1805 - ஆகஸ்ட் 04, 1875) அவர் வறுமையில் வளர்ந்தாலும், பல்கலைக் கழக கல்வி பயின்றவர்! 1835 - 1872 காலப் பகுதியில் அவர் வெளியிட்ட கதைத் தொகுதிகள் பலவற்றில், இலக்கிய எழுத்து மரபைத் தகர்த்து, பேச்சு மொழியின் வழக்குகளையும், அமைப்புகளையும் பயன் படுத்தியுள்ளார்!

 நாட்டுப்புறப் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட உணர்வுக் கூறுகளை, கற்பனைச் செறிவோடு கலந்து கொடுத்த இவரது படைப்புகளில் The Ugly Duckling, The Emperor's New Clothes போன்ற பிரபல கதைகளும் அடங்கும்! நன்மையும், அழகும் இறுதியில் வெல்லும் என்ற நேர்மறை நம்பிக்கையை இவரது சில கதைகள் வெளிப்படுத்தினாலும், வேறு சில கதைகள் ஆழமான எதிர்மறைத் தன்மையைக் கொண்டவை என்று கூறப்படுகிறது!

 நாடகங்கள், புதினங்கள், கவிதைகள், பயண நூல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் எனப் பலவற்றையும் எழுதியுள்ளார். இவர் தனது 70 வயதில் 1875 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் சர்வதேச குழந்தைகள் புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hans Christian Andersen Birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->