"என் 20 ஆண்டு கனவை நிறைவேற்றிவிட்டார்." நெகிழ்ந்து போன திரிஷா.! ரசிகர்களை குழப்பிவிட்ட நடிகை.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. சினிமா துறையில் 25 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா. ரஜினி, கமல், சூர்யா, அஜித், விக்ரம், விஜய் என தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களுக்கும்  கதாநாயகியாக நடித்திருப்பவர். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு தளபதி விஜயின் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

திரிஷாவின் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திரிஷா. முதல் பாகத்திலேயே ராஜதந்திரமான இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்தது பற்றியும் மணிரத்தினம் படங்கள் பற்றியும் தன்னுடைய எண்ணங்களை பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார் அவர். இது குறித்து பேசியிருக்கும் த்ரிஷா மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கதாநாயகியின் கனவு என்றும் தெரிவித்திருக்கிறார்.

20 வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பது கனவு நிறைவேறியதை போன்ற ஒரு உணர்வு என்று தெரிவித்துள்ளார். ஆனால் இவர் 2004 ஆம் ஆண்டில் வெளியான மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் இவர் ஒரு கதாநாயகியாக நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trisha feels overwhelmed to act in mani rathnam film as a lead role


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->