திரிஷாவின் சமூக வலைதள கணக்கு 'ஹாக்'; சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி..!
Trisha Krishnan X account was hacked
நடிகை திரிஷாவின் சமூக வலைதளமான (க்ஸ் தளம்)ட்விட்டர் கணக்கு, 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய திரையுலகின் நம்பர் 01 நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்குப்பட உலகில் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருப்பவர்.
அவரது சமூக வலைதள கணக்கை கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவரது எக்ஸ் தளம் (ட்விட்டர்) கணக்கை மட்டும் 60 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், திரிஷா அவர்கள் இன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டிருந்தார். அதில் அவர் 'என்னுடைய எக்ஸ் சமூக வலைதள கணக்கு (டுவிட்டர்) ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது மீட்கப்படும் வரை அதில் பதிவிடப்படும் எதுவும் என் பதிவல்ல' என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ரசிகர்கள், அவரது எக்ஸ் பக்கத்தில் சென்று பார்த்தனர். ஆனால், அங்கு சர்ச்சைக்குரிய பதிவுகள் எதுவும் இல்லை என்று அவர்களது பதிவில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், த்ரிஷாவின் எக்ஸ் பக்கத்தை கைப்பற்றியது யார், அவர்களது நோக்கம் என்ன என்பது பற்றி தெரியாத நிலையில், ஹேக் செய்யப்பட்ட க்ஸ் தள கணக்கை மீட்க, திரிஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் நடிகை கஸ்துாரியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று திரிஷாவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Trisha Krishnan X account was hacked