டாப் கியரில் திரிஷா! மெகா ஸ்டார் உடன் கை கோர்ப்பது உறுதி! - Seithipunal
Seithipunal


கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வந்துககொண்டிருப்பவர் த்ரிஷா. இவருக்கு 40 வயதாகிறது என்று கூறினால் யாருமே நம்ப மாட்டார்கள்.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளாக கதாநாயகியாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. 

மங்காத்தா படத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு சரியான படங்கள் கிடைக்காமல் இருந்த நேரத்தில், 96 திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் அவர் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார். தற்போது த்ரிஷா விஜய்யுடன் லியோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha signed to act with actor Chiranjeevi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->