விடாமுயற்சி அப்டேட்.. அஜித் குமாருடன் மீண்டும் ஜோடி சேரும் திரிஷா..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுரையின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1ம் தேதி அவருடைய பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் அப்டேட் எப்பொழுது வெளியாகும் என காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் தற்பொழுது தனது உலக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை திரும்பும் நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் உடன் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகை திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதால் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trisha to pair up with Ajith Kumar again in vidamuyarchi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->