Va Varalam Va | தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள "வா வரலாம் வா" படத்தின் First Look வெளியீடு! - Seithipunal
Seithipunal


பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் "வா வரலாம் வா" திரைப்படத்தின் First Look  இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து இயக்கி இருக்கும் திரைப்படம் "வா வரலாம் வா".

இப்படத்தின் நாயகனாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் அறிமுகமாகியுள்ளார்.

கதாநாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, வாசு விக்ரம், வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி,  வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். 

இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் First Look போஸ்டரை இன்று மாலை, இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா அவர்களால் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaa Varalam Vaa movie First Look Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->