இந்த பக்கம் கீர்த்தி சுரேஷ்.. அந்த பக்கம் உதயநிதி.. பூரிப்புடன் கேக் வெட்டிய வடிவேலு.!  - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்குகின்ற 'மாமன்னன்' ஷூட்டிங்கில் கலந்துகொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, படக்குழுவினருடன் சேர்ந்து தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கின்றார்

மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகின்ற திரைப்படம் தான் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தான் தயாரிக்கின்றது. இந்தத் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். 

மேலும் நடிகர்கள் வடிவேலு பகத் பாசியில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு படக்குழு மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து வடிவேலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vadivelu cake Cutting with mamannan Team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->