BREAKING; நாளை வெளியாகிறது வலிமை ட்ரெய்லர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 'வலிமை' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில்  #VALIMAITrailer என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valimai trailer release tomorrow


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->