என்ன.. வாணி போஜனுக்கு கல்யாணமா.?! வைரலாகும் வீடீயோவால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்த வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலமாகத்தான் ரசிகர்களிடம் நிறைய வரவேற்பை பெற்றார். இவர் ஏர்லைன்ஸில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து டிசைனராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். 

இதன் மூலம் விளம்பர படங்களில் நடித்து பிரபலமடைந்த அவருக்கு விஜய் தொலைக்காட்சியின் ஆஹா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தெய்வமகள் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த வாணி போஜன் ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் களமிறங்கினார். 

படிப்படியாக முன்னேறிய அவர் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது நடிப்பில் ஒரு இரவு, அதிகாரம் 79 ஆகிய திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. 

மேலும், நேக்கு மாத்திரமே செப்பே என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.கதாநாயகியாக வைபவ்வின் சிக்சர், ஓ மை கடவுளே, ட்ரிபிள்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக வாணி போஜன் லாக்கப் மற்றும் ms.w உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார். சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் சமீபத்தில் பட்டுப்புடவை அணிந்து வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவருக்கு திருமணமா என அதிர்ந்து போயுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vani bhojan latest photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->