பிக்பாஸ் லாஞ்சிங் காஸ்டியூமில் வனிதா.! ஆரம்பமான ஷூட்டிங்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இருந்தாலும், அவரது நடிப்பு அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திருமணம் குழந்தைகள் என்று குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

நீண்ட நாட்களாக திரைத்துறையில் தலைகாட்டாமல் இருந்த வனிதா பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து, பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 

பின்னர் விஜய்டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் வனிதாவை காணமுடிந்தது. 
 சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் வனிதா சமீபத்தில் சேண்டி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதாக தெரிவித்தார். இந்த நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் லாஞ்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஸ்ட்யூமில் ஒரு செல்ஃபி வெளியிட்டு குதூகலித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanitha BB ultimate costume


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->