தன்னை தானே கலாய்த்து கொண்டு.. முதல் ஆளாய் உள்ளே நுழைந்த வத்திக்குச்சி வனிதா.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இருந்தாலும், அவரது நடிப்பு அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திருமணம் குழந்தைகள் என்று குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

நீண்ட நாட்களாக திரைத்துறையில் தலைகாட்டாமல் இருந்த வனிதா பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து, பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 

பின்னர் விஜய்டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் வனிதாவை காணமுடிந்தது. 
 சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் வனிதா தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். முதல் போட்டியாளராக வனிதா தான் உள்ளே நுழைந்துள்ளார். அவர் கமலஹாசனுடன் சேர்ந்து சுவாரசியமாக உரையாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் நுழையும்போது அறிமுகப் பாடலுக்கு நடனமாடும் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதைப்போல டயலாக் பேசி நடனம் ஆடி வருகிறார். இது ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanitha First participate on BB Ultimate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->