பிரதீப் - ஜோவிகா சண்டை.. மகளுக்கு ஆதரவாக பதிவிடும் வனிதா.! - Seithipunal
Seithipunal


தமிழ் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பமானது முதல் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களான மாயா, கூல் சுரேஷ், விசித்திரா, பூர்ணிமா, சரவணம் விக்ரம், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, ரவீனா என்று அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சீசனில் பிக் பாஸ் இல்லமும் பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டாகப் பிரிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் தமிழில் முதல் முறையாக ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைய இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் நடைபெற்று வரும் ரேங்கிங் டாஸ்க்கில் பிரதீப் முதல் இடத்தையும், ஜோவிகா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், ஜோவிகா தனக்கு முதல் இடம் வேண்டும் என்று பிரதீப்பிடம் வாதிட ஒருகட்டத்தில், பிரதீப் தான் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், ஜோவிகா வசதியான பெண் என்பதால் அந்த முதலிடமும் பிக் பாஸ் பணமும் தனக்குத் தேவை என்று வாதிட்டார். 

பதிலுக்கு ஜோவிகாவும் தானும் மிடில் கிளாஸ் பெண்தான் என்றுக் கூறியுள்ளார். இதற்கு வனிதா தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘ஜோவிகாவின் அம்மா தனது மகளை வளர்ப்பதற்காகக் கஷ்டப்படுகிறார்.

ஆனால், இந்த வயதில் பணம் சம்பாதிக்க முடியாமல் அதற்காக இந்த சமூகத்தை குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பிரதீப்? தனது தோல்வியை சொல்லி சொல்லியே இந்த நிகழ்ச்சியில் வெற்றிப் பெறலாம் என்று பிரதீப் நினைக்கிறார்.

இது முற்றிலும் தவறான விவாதம் பிரதீப். ஏழையால் சட்டை, செருப்பு வாங்க முடியாது, அதனால் நடிகனாக வேண்டும். அதனால் படம் தயாரிக்க பணம் தேவை. ஒரு நடிகருக்கு திறமை தேவை, வாய்ப்புகளை பெற இயக்குனர்களை சந்திக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vanitha post against bigg boss 7 pretheep


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->