#வீடீயோ: அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்கலா.?! பஞ்சாயத்தை துவங்கிய வனிதா.! கடுப்பில் ஹவுஸ்மேட்ஸ்.!
Vanitha promo on BB ultimate
பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமடைந்து படவாய்ப்புகளுடன் ஜோராக இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது. மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை. இதனால் விஜய்டிவி எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்கவில்லை என்பதால் தான் அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் சமீபத்திய புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வனிதா விஜயகுமார் வழக்கம்போல பிக் பாஸ் வீட்டில் தனது அராஜகத்தை ஆரம்பித்துள்ளார். ஹவுஸ் மேட்ஸ்களுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.
English Summary
Vanitha promo on BB ultimate