புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த வாரிசு படத்தின் புதிய போஸ்டர்.!
varisu movie new poster released
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' உள்ளிட்ட மூன்று பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஆகி உள்ளது. அதேபோன்று, இந்த படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புத்தாண்டான இன்று இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'தி பாஸ் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டரில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாகி பரவி வைரலாகி வருகிறது.
English Summary
varisu movie new poster released