நம்மகிட்ட வாரிசு&துணிவு ஸ்பெஷல் ஷோலாம் கிடையாதுப்பா! கமலா சினிமாஸ்க்கு குவியும் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படமும், நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது.

இரு படங்கள் மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் உற்சாகமும் உச்சத்தை தொட்டு உள்ளது. 

இந்நிலையில், "அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், நாங்கள் வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் அதிகாலை காட்சியை திரையிடவில்லை" என்று 'கமலா சினிமாஸ்' திரையரங்கம் தெரிவித்துள்ளது.

அது குறித்த கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் ட்விட்டர் செய்தி குறிப்பில், "வாரிசு மற்றும் துணிவு அதிகாலை ஒரு மணி, நான்கு மணி காட்சிகள் கமலா திரையரங்கில் உறுதி ஆகவில்லை.

அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது எங்களின் தேர்வு கிடையாது. எனவே வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் ஸ்பெஷல் ஷோ (சிறப்பு காட்சி) காலை ஏழு முப்பது மணிக்கு திரையிடப்படும்" என்று கமலா சினிமாஸ் திரையரங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வரவேற்பு அளித்து, 'நீங்கள் எப்போதும் இதையை கடைபிடியுங்கள்' என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu Thunivu Special show kamala cinemas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->