நீண்ட நாட்களுக்கு பின்... நகுலின் ''வாஸ்கோடகாமா'' திரைப்படத்தின் நியூ அப்டேட்.! - Seithipunal
Seithipunal


பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 

நகுல் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்.ஜி.கே இயக்கத்தில் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வாஸ்கோடகாமா''. 

இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வருகின்ற ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதன்படி நகுல் நடிப்பில் உருவாகியுள்ள வாஸ்கோடகாமா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மேலும் அந்த போஸ்டரில் திரைப்படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடகாமா திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.  அருண் என்.வி. இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு எம்.எஸ். சதீஷ்குமார் ஒளி பதிவு செய்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vascodagama movie new update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->