வீரம் பட நடிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து இவர் 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படத்தில் நடித்தது உள்ளம் தமிழ் ரசிகர்களிலேயே பிரபலமானார். 

அதைத் தொடர்ந்து இவர் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பாலா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veeram movie actor Bala admitted hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->