'விஜய் 68' படத்தில் டாடா பட ஹீரோயின்! அசத்தலான அப்டேட்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 'லியோ' படப்பிடிப்பு சமீப காலத்தில் முடிவடைந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, ''விஜய் 68'' வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாக உள்ளது. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

விஜய் இந்த படத்தில் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகா ஜோடியாகவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து, 'டெஸ்ட் போட்டோஷூட்' அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  'டாடா' படத்தின் மூலம் பிரபலமான அபர்ணா தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 68 movie update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->