புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த 'விஜய் 68' படக்குழு! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 68' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay 68 movie update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->