"வடக்கனும், கிழக்கனும்" விஜய் ஆண்டனி போட்ட சர்ச்சை ட்வீட்.! குவியும் ஆதரவு.!
Vijay Antony about vadakkan tweet Viral
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்தான் விஜய் ஆண்டனி. இவர் டிஷ்யூம் திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.ஆனால் அந்தப் படத்தில் அவர் இசையமைக்கவில்லை.
அவரது இசையமைப்பில் சுக்கிரன் திரைப்படம் தான் முதலில் வெளிவந்தது இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னட படங்களிலும் இசையமைத்து வருகிறார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் விஜய் ஆண்டனி கலந்து கொள்வார். கடந்த 2016 இல் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து அவரே இயக்கி நடித்து வருகின்றார். கடந்த ஜனவரி 16 இது குறித்த பாடல் காட்சிகள் சூட்டிங் நடந்து வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்ப்படு சமீபத்தில் மீண்டார். இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே வட மாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வடக்கன்ஸ் என்று கூறி கிண்டல் செய்வதும் அவர்கள் பற்றி அவதூறு பேசுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது.
இது பற்றி தான் விஜய் ஆண்டனி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில், அவர், "வடக்கனும், கிழக்கனும், தெற்கணும், மேற்கணும் நம்மைப் போல் தான் தன் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன். யாதும் ஊரே யாவரும் கேளிர். Anti bigili." என்று கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் வட மாநிலத்தவர்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vijay Antony about vadakkan tweet Viral