நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் கடுமையான காயம்?! பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு?!  - Seithipunal
Seithipunal



நடிகரும். இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் இசை அமைப்பிலும், நடிப்பிலும் தனித்துவமாக திகழ்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்து வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவின் தீவில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், படப்பிடிப்பு சண்டைக்காட்சியின் போது படகு விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு,  மலேசியாவில் உள்ள மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் ஆபத்தான கட்டடத்தை கட்டத்தை தாண்டி உள்ளதாகவும், அவரின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antony Health info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->