முழுநேர நடிகராக மாறும் விஜய் ஆண்டனி! புதிய படத்தின் அப்டேட்!! - Seithipunal
Seithipunal


நடிகர் சரத்குமாரும் விஜய் ஆண்டனியும் சேர்ந்து நடித்துள்ள " மழை பிடிக்காத மனிதன் ' படத்தின் டீசர் நேற்று வெளியானது. மழை பிடிக்காத மனிதன் நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நடிகர் சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள புதிய படம் " மழை பிடிக்காத மனிதன் ". இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையை ஓரம்கட்டிவிட்டு முழுநேர நடிகனாக மாறிவுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்தநிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் மூலம் ஆக்க்ஷன் ஹீரோவாக மாறிவுள்ளார். நேற்று இந்தப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் டாலி தனஞ்செழியா, மெகா ஆகாஷ், முரளி ஷர்மா, பிரிதிவி, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏ.எல் அழகப்பன் இயக்குனர் ராமன உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் சத்யராஜ் மழை பிடிக்காத மனிதன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படத்தை கோலிசோடா படத்தின் இயக்குனரும் பிரபல ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.

மழை பிடிக்காத மனிதத்தின் படம் குறித்து படக்குழு பேசும்போது, சக மனிதர்கள் மீது அக்கறை மட்டும் கருணை உள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து யாரோ ஒருவனின் எதிர்காலம் ஆகிறான் என்பதுதான் கதை. சமூகம் ஒடுக்கப்பட்டவர்களை எப்படி நடத்துகிறது என்பதும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் கதாபாத்திர பெண்ணை வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாக படம் இருக்கும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்தமான் தீவுகள், டைவ் டாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நேற்று  இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antony New movie update


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->