விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் தமிழரசன். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சங்கீதா, ராதாரவி, கஸ்தூரி, ரோபோ சங்கர், மதுமிதா, ஒய்.ஜி மகேந்திரன், சென்றாயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.  

இந்த திரைப்படம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் மோசடிகளை குறித்த கதைக்களம் கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழரசன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் மார்ச் 31 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் தற்பொழுதாவது வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antony Tamilarasan movie release date announced


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->