"பணம் உலகிற்கு தீங்கு விளைவிக்கும்".. விஜய் ஆண்டனியின் "பிச்சைக்காரன் 2" படத்தின் மிரட்டலான ஸ்னீக்பீக் வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிச்சைககாரன்  திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தாய் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான அந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. 

இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி நடித்த தோடு அவரே இயக்கவும் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பெற்று அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் ஸ்னீக்பீக் ட்ரைலர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்னீக்பீக் முன்னோட்ட காட்சியில் "மணி இஸ் இன்சூரிஸ் டு தி வேர்ல்ட்" என்ற வாசகத்துடன் பின்னணியில் ஒரு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒலிக்கிறது. அதன் பின்னர் அத்தொழில் அதிபர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி காட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒரு நேர்காணல் காட்சியில் மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்தான நன்மைகள் பேசப்படும் அதே வேளையில் தீயவர்கள் பயன் பெற்றால் என்ன நடக்கும் என்ற கேள்வியுடன் இந்த ஸ்னீக்பீக் நிறைவடைகிறது.

உலகில் தற்பொழுது மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அபாயங்கள் குறித்து இத்திரைப்படம் அமைந்திருக்கும் என்பதை ஸ்னீக்பீக் உறுதி செய்துள்ளது. படத்தின் டிரைலர்க்கு பதிலாக 4 நிமிட ஸ்னீக்பீக் காட்சியை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Antonys Pichaikaran 2 Sneak Peek video released


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->