அவளுடன் நானும் இறந்துவிட்டேன்! மகளின் மறைவு குறித்து விஜய் ஆண்டனி உருக்கம்! - Seithipunal
Seithipunal


பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி மூத்த மகள் மீரா எழுதி வைத்த கடிதம் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கியது. அந்த கடிதத்தில் "love you all.. miss you all.." எனத் தொடங்கி தனது குடும்பம் இல்லாமல் தான் தவித்து போவேன் என்றும் தனது குடும்பமும் தான் இல்லாமல் தவித்து போகும் என்றும் உருக்கமாக இந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகளைப் பிரிந்து வாடும் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள், உங்கள் விஜய் ஆண்டனி" எனக்கு உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VijayAntony released a heartfelt letter on daughter death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->