ரூ.100 கோடி வசூலை கடந்த விக்ரமின் ‘தங்கலான்' ! - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் வெளியானது.

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் காட்சிப்படுத்தி இருந்த மாய யதார்த்தவாதம் புதிய திரை அனுபவத்தை கொடுப்பதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இப்படம் கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் விக்ரம், பார்வதி போன்றோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படம்  வரும் 30-ம் தேதி வட இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikrams Thangalan crossed Rs100 crore collection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->