மார்க் ஆண்டனி படத்திற்கு 6.5 லட்சம் லஞ்சம் கேட்டனர்! சென்சார் போர்டு மீது விஷால் புகார்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தமிழில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சுமார் 60 கோடிக்கு மேல் வாரிக்கு குவித்த இந்த திரைப்படம் இந்தியில் இன்று வெளியானது. 

மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி டப்பிங்க்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூபாய் 6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் லஞ்சம் கொடுத்ததற்கான வங்கி கணக்கு விவரங்களையும் நடிகர் விஷால் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலை பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் "சினிமாவில் ஊழல் காட்டுவது பரவாயில்லை, ஆனால் நிஜ வாழ்க்கையில் ஊழல் இருப்பதை ஜீரணிக்க முடியாது. மும்பை அலுவலகத்தில் இன்னும் மோசமாக நடக்கிறது. எனது மார்க் ஆண்டனி படத்தின் ஹிந்தி பட பதிப்பிற்கு இரண்டு பரிவர்த்தனைகளாக ரூபாய் 6.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது. 

சென்சார் போட்டு அதிகாரிகள் படத்தை திரையிடுவதற்கு 3 லட்சம் ரூபாயும், படத்திற்கு சான்றிதழ் வழங்க 3.5 லட்சம் லஞ்சமாக கேட்டனர். எனது சினிமா வாழ்க்கையில் இந்த நிலையை நான் எப்போதும் சந்தித்ததில்லை. 

இது திரைப்படம் வெளியானதில் இருந்து சம்பந்தப்பட்ட இடைத்தரகர் மேகனாவுக்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இதை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்தது எனக்காக அல்ல எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. 

நான் உழைத்து சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? வேற வழியில்லை அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரத்தை வெளியிடுகிறேன். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்" என எனது வீடியோவில் பேசியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் சென்சார் போரில் இருக்கும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal complaint Censor Board demanded 6lakh bribe for Mark Antony film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->