இந்த குட்டி.. அந்த சின்னத்திரை பிரபலமா.?! ஆச்சர்யம் தரும் புகைப்படம்.!
vj manimegalai childhood photo went viral in social media
சின்னத்திரை மற்றும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து யார் இந்த பிரபலம்? என்று கேள்வி கேட்டு டிரெண்டிங் செய்வது எப்போதும் நடக்கக் கூடிய ஒன்று.
அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பிரபலமாகயிருக்கும் தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தக் குழந்தையாகயிருக்கும் திரை பிரபலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றும் மணிமேகலை தான். அவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மணிமேகலை எப்போதுமே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை மற்றும் தொகுப்பாளன் ஆவார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மணிமேகலை திடீரென குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சின்னத்திரை ரசிகர்களுக்கே மிகப்பெரிய இழப்பாகும்.
English Summary
vj manimegalai childhood photo went viral in social media