தனுஷை கலாய்த்த SK?....TRAILER LAUNCH ல் SK கூறியது என்ன? - Seithipunal
Seithipunal


கூழாங்கல் திரைப்பட இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகர் சூரியை வைத்து கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள் என பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இதன்மூலம் நடிகர் தனுஷை குறி வைத்து கூறுகிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன்மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் . அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். தொடர்ந்து  மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தாலும். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

2013 ஆம் ஆண்டு வெளியான எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும், சில மன கசப்புகளால் பிரிந்தனர்.

அதற்கு பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த நிலையில், நடிகர்  சிவகார்த்திகேயனின் தேவையில்லாத  சர்ச்சை பேச்சால் மீண்டும் அனைந்திருந்த தீ மீண்டும் எரிய தொடங்கியுள்ளது. இதனால் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் இடையே யார் சரி என்ற வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What did SK say at the TRAILER LAUNCH


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->