"ரஜினி இல்லன்னா விஜய்காந்த் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டாரா".? வருடங்களுக்கு பின் வெளியான ரகசியம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் டாப் ஃபோர் கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவரது இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். பெரிய பணக்கார வீட்டைச் சார்ந்த விஜயகாந்த் இவருக்கு சொந்தமாக ரைஸ்மில் ஒன்றும் இருந்திருக்கிறது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தனது ரைஸ்மிலில் பணியாற்றி வந்திருக்கிறார் விஜயகாந்த்.

சிறு வயது முதலே சினிமாவின் மீது தீராத ஆசை கொண்ட கேப்டன் மதுரையைச் சார்ந்த சேனா ஃபிலிம்ஸ்  நிறுவனத்தை நடத்தி வந்த மன்சூருடன்  நெருங்கி பழகி வந்திருக்கிறார். இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீபிரியா மற்றும் பல முன்னணி நடிகர்கள் மதுரைக்கு வருகை புரிந்துள்ளனர்.

விஜயகாந்தை அழைத்த மன்சூர், ரஜினிகாந்த் மற்றும் அவருடன் வந்திருக்கும் நடிகர் நடிகைகளை அவர்களது ஹோட்டலிலிருந்து பத்திரமாக திரையரங்கம் அழைத்துச் சென்று விட்டு  மீண்டும் ஹோட்டலிற்கு கொண்டு விடும் பொறுப்பை விஜயகாந்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.

விஜயகாந்த் அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். அப்போது விஜயகாந்திடம் பேசிய ரஜினி நீங்கள் என்னைப் போலவே இருக்கின்றீர்கள் ஏன் சினிமாவிற்கு வரக்கூடாது என கேட்டிருக்கிறார். அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே விஜயகாந்துக்கு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்திருக்கிறார் விஜயகாந்த். இவ்வாறு விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு ரஜினியின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. இந்த செய்தி பல வருடங்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why should you not act in cinema Do you know who asked Captain Vijayakanth to act in cinema


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->