தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது - இந்தியன் 2 இசை விழாவில் கமலஹாசன் நெகிழ்ச்சி !! - Seithipunal
Seithipunal


ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கமலஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இவ்விழாவில் பேசிய கமலஹாசன், " இந்தியன் படத்தை பற்றி எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அன்று பார்த்த அதே ஷங்கர் தான் இன்றும் உள்ளார். நான் பலரிடம் இருந்தும் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அதனால் தான் இன்றும் ரசிகர்கள் முன்னிலையில் நிற்கிறேன். 

இந்தியன் 2 படத்துக்கு கொரோனா, ஷூட்டிங்கில் விபத்து என்று பல தடைகள் வந்தன. உதயநிதி தான் என்னுடன் உறுதுணையாக இந்தப் படத்தின் பிரச்சினைகளின் போது உடன் நின்றார். 'உங்களோடு நான் திரும்ப இந்த படத்தில் வேலை பார்க்க போகிறேன்' என்று கூறிய அசிஸ்டன்ட் தான் விபத்தில் இறந்துவிட்டார்.

அதேபோல் விவேக், மனோபாலா இப்போது இல்லை என்பதும் ஒரு குறையாக உங்களுக்கு தெரியாது. என்னை விட இந்தியன் தாத்தாவுக்கு 15 வயது அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பது தான். பிரித்தாளும் முயற்சி ஒருபோதும் இந்தியாவில் நடக்காது.

தமிழன் ஏன் இந்தியாவை ஆளும் நாள் வரக்கூடாது? இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும் என்று தான் இந்தியன் படம் உணர்த்துகிறது" என்று கமலஹாசன் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why Tamilan Will Not Rule India Kamalahassan Speech in Indian 2 Audio Launch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->