பெங்களூருவில் பரபரப்பு: சாலையில் பாகிஸ்தான் கொடியை ஒட்டிய 06 பேர் அதிரடி கைது..!
06 people arrested in action for pasting the Pakistani flag on the road in Bengaluru
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் ஜகத் சர்க்கிள், நேஷனல் சவுக் பகுதியில் உள்ள சாலையில் பாகிஸ்தான் கொடிகள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்பு அந்த கொடியை கிழித்து எறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கலபுரகி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிலர் பாகிஸ்தான் நாட்டு கொடியை சாலையில் ஒட்டியதாக தெரியவந்துள்ளது. இதை பார்த்து முஸ்லிம் பெண்கள் அந்த கொடியை அகற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாலையில் பாகிஸ்தான் கொடியை ஒட்டியதாக 06 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவர்களை எச்சரித்துள்ளனர்.
English Summary
06 people arrested in action for pasting the Pakistani flag on the road in Bengaluru