புதுவிதமாக பச்சரிசியை வைத்து அல்வா செய்தால் எப்படி இருக்கும்....! ட்ரை பண்ணி தான் பாருங்களேன்....!
made halwa with green raw rice new way
பச்சரிசி அல்வா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பச்சரிசி மாவு 3 கப்
கடலை பருப்பு 1 கப்
வெல்லம் ஒன்றரை கப்
நெய் தேவைக்கேற்ப
முந்திரி 15
ஏலக்காய் பொடி 4 சிட்டிகை

செய்முறை :
முதலில் அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். பின்பு நெய்யில் முந்திரி பருப்பை வறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு பருப்பு குழையாமல் ஒரளவு திடமாக இருக்க வேண்டும். இதில் வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும்.
பின்பு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.பருப்பு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். இதில் மாவு வெந்து வரும் வேலையில் கொதிக்க வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும். பிறகு முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். குறிப்பாக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். இப்போது பச்சரிசி அல்வா ரெடி.
English Summary
made halwa with green raw rice new way