கரும்புள்ளிகளைப் போக்க இந்த இலை கண்டிப்பாக உதவும்... ட்ரை பண்ணி பாருங்க...! - Seithipunal
Seithipunal


கரும்புள்ளிகள் குறைய உதவும் துளசி:

  • துளசி, புதினா, வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது. பிறகு, பச்சைப் பயறுடன் வேப்பிலை சாற்றை கலந்து முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பரு போய் விடும். 

  • சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல் சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். 
  • துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.
  • துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leaf will definitely help you get rid dark spots


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->