சம்மர்ல மாம்பழம் வச்சு கேக் செஞ்சா எப்படி இருக்கும்....! சும்மா ஒரு ட்ரை பண்ணலாம...!
how to make mango cake
மாம்பழம் கேக் எப்படி பண்றதுன்னு பாக்கலாமா...
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
மைதா -1 கப்
கண்டன்ஸ்டு மில்க் -2 கப்
உருகிய வெண்ணெய் -1 கப்
சர்க்கரை - 1 கப்
மேங்கோ கூழ் -2 கப்
வெண்ணிலா அல்லது மேங்கோ எசன்ஸ் - 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 ஸ்பூன்
பேக்கிங் சோடா -1 ஸ்பூன்

செய்முறை :
ஒரு சதுர பான் மீது எண்ணெய் தடவி வைக்கவும். பின் ஒரு ஜாரில் மாம்பழம் எடுத்து நன்றக மசித்து கொள்ளவும்.ஒரு கடாயில் வெண்ணெய் உருகி ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு அவற்றில் கண்டன்ஸ்டு மில்க், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மசித்து வைத்துள்ள மேங்கோ கூழ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்னர் கோதுமை மாவு, மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். சதுர பான் மீது சமமாக பரப்பி வேகும் வரை அவற்றை பேக் செய்து எடுத்தால் மாங்கோ கேக் ரெடி.இதை ட்ரை பண்ணுங்க மக்களே.