ஏ சி யுடன் கூடிய வகுப்பறை.. தமிழ்நாட்டின் முதல் பாலிடெக்னிக்.. முன்னாள் மாணவர்கள் உதவி..!
1st Polytechnic in Tamilnadu with AC
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 1981ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பாலிடெக்னிக்கில் மொத்தம் 5 பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் ஒரு ஆண்டிற்கு 520 மாணவர்களை படிப்பதற்கு வசதிகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இந்த பாலிடெக்னிக் கல்லூரி வளாகமெங்கும் புதர் மண்டி காடு போல் காட்சியளித்தது. மேலும் கல்லூரி கட்டிடங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. இதையடுத்து இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது.
இதையடுத்து அரசு நிதி மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் இக்கல்லூரியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கல்லூரி வளாகத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டுகள், ஏ சி, LED மின் விளக்குகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டிலேயே ஏசி பொருத்தப்பட்ட முதல் பாலிடெக்னிக் என்ற பெருமையை இக்கல்லூரி பெற்றுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூறிய கல்லூரி முதல்வர், "2006ம் ஆண்டு இங்கு படித்த மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் கல்லூரியின் புனரமைப்பு பணிக்கு உதவினர். மேலும் அரசின் நிதியுதவியுடனும் கல்லூரியில் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மூலிகைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
English Summary
1st Polytechnic in Tamilnadu with AC