கூட்டுறவுத் துறையில் 2,257 பணியிடங்கள்.. இன்னும் 15 நாள் தான்.!! உடனே அப்ளை பண்ணுங்க.!!
2257 Assistant and Junior Assistant job opening in Cooperative Dept
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் 2,257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் - 28, செங்கல்பட்டு - 73, கோவை – 110, சென்னை – 132தி, ண்டுக்கல் – 67, ஈரோடு – 73, காஞ்சிபுரம் – 43, கள்ளக்குறிச்சி – 35, கன்னியாகுமரி – 35, கரூர் – 37, கிருஷ்ணகிரி – 58, மயிலாடுதுறை – 26, நாகப்பட்டினம் – 8, நீலகிரி – 88, ராமநாதபுரம் - 112, சேலம் – 140, சிவகங்கை – 28, திருப்பத்தூர் – 48, திருவாரூர் – 75, தூத்துக்குடி – 65, திருநெல்வேலி – 65, திருப்பூர் – 81, திருவள்ளூர் – 74, திருச்சி – 99, ராணிப்பேட்டை – 33, தஞ்சாவூர் – 90, திருவண்ணாமலை – 76, கடலூர் – 75, பெரம்பலூர் – 10, வேலூர் – 40,விருதுநகர் – 45, தருமபுரி – 28, மதுரை – 75, நாமக்கல் – 77, புதுக்கோட்டை – 60, தென்காசி – 41, தேனி – 48, விழுப்புரம் - 47 என மொத்த 2,257 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும் எனவும், ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடிந்திருந்தால் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரும் 24.12.2023 அன்று இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரும் 01.12.2023ம் தேதி மாலை 5:45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சென்னையை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் https://www.drbchn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
English Summary
2257 Assistant and Junior Assistant job opening in Cooperative Dept