அரசு ஆசிரியர்கள் பணிக்கான வயது உச்ச வரம்பில் மாற்றம் ..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சீனியாரிட்டி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் கல்வி பணியை முழுமையாக செய்ய முடியாத காரணத்தால் கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பொது பிரிவில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயதும் இதர பிரிவுகளுக்கு 45 வயதும் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பிரச்சனையின் காரணமாக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை. இந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் நியமத்திற்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி 2022 டிசம்பர் வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு பொதுப் பிரிவினருக்கு 40 வயதில் இருந்து 45 வயதாகவும் இதர பிரிவினருக்கு 45 வயதில் இருந்து 50 வயதாகவும் வயது உச்சவரம்பு உயர்த்தி வழங்கப்பட்டது. 

இந்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் (டிச.31) முடிவடைந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் வெளியிட்ட அரசாணையின்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு பொது பிரிவினருக்கு 42 ஆகவும் இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் இனி பொது பிரிவினருக்கு 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவு 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற சூழல் உண்டாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Age limit changed again for Tn govt teachers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->