திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்ககழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து 8 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து 'போராட்டம் நடத்தினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

"திமுக ஆட்சியில் பல்வேறு சம்பவங்கள் தவறாக நடக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அறவழியில் கூட போராட முடியவில்லை. தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. 

காவல்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்தி அடைந்ததாக எப்படி கூற முடியும்?. காவல் ஆணையர் அவ்வாறு கூறியது தவறு. உடலை வருத்திக் கொண்டு ஒரு விஷயத்தை வேண்டினால் பலன் கிடைக்கும். பாஜகவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும். 

தமிழ் மண்ணின் மரபுப்படி பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் யாரும் இது மாதிரி செய்ய மாட்டார்கள். பாஜக தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். வெற்றி தோல்வியை தாண்டி தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது.

லண்டன் பயணத்திற்கு பிறகு என் பாதை தெளிவாக ஆரம்பித்துள்ளது. லண்டன் பயணத்திற்கு பிறகு, எனக்கு அரசியலில் நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. அனைத்து மேடைகளிலும் திமுகவை தோலுரித்து காட்டவுள்ளோம்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn bjp leader annamalai press meet about dmk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->