கிருஸ்தவ மதத்தை சேர்ந்த கல்லூரி பெண் முதல்வரை பணியிட இடமாற்றம் செய்துள்ள திருப்பதி தேவஸ்தானம்..! - Seithipunal
Seithipunal


தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக கிறித்துவ மதத்தை சார்ந்த அசுந்தா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்களை வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்திருந்தார். அதன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பத்மாவதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக அசுந்தா பணியில் இருந்து விடுவித்து அதற்கு பதிலாக நரசிங்கபுரத்தில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வழங்கியுள்ளது. ஆந்திர அரசு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் முதல் நபராக அசுந்தா மாற்றப்பட்டுள்ளார். 

கிருஸ்தவ மாற்று மதத்தை சேர்ந்த அசுந்தா, கல்லூரியில் வாராந்திர பூஜைகள் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அவ்வாறு பூஜை நடந்தாலும் அதில் பங்கேற்காமல் விலகி வந்ததாகவும், குறிப்பாக பிரசாதங்களை புறக்கணித்து வந்ததாகவும் அவர் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupati Devasthanams has transferred the female principal of a Christian college


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->