ஆந்திராவில் பரபரப்பு; தன்னை விட 22 வயது நபருடன் கட்டாய திருமணம்; மணமேடையில் கதறிய இளம்பெண்..!
Forced marriage to a man 22 years older than her Young woman cries at the wedding
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னாவரத்தில் சத்தியநாராயணசாமி கோயிலில் நேற்று காலை 20 வயது இளம்பெண்ணுக்கு 42 வயது ஆணுடன் கட்டாய திருமண ஏற்பாடு நடந்தது. கோயில் வளாகத்தில் சிறிய அளவில் மணமேடை அமைக்கப்பட்டு, இருவீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால், மணமேடையில் அந்த பெண், கதறி அழ,அங்கு மணமகன் அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் அதனை பார்த்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக கோயிலுக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் மணமகளிடம் கதறி அழுதது ஏன் என விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த மணப்பெண் எனக்கு 20 வயதாகிறது. ஆனால், என்னை விட 22 வயது அதிகமுள்ளவருடன் தனது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
அத்துடன், கட்டாயப்படுத்தி மணமேடைக்கு தன்னை அழைத்து வந்துவிட்டனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து விசாரித்தனர். பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் திருமணத்தை நடத்தக்கூடாது என்றும் எச்சரித்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இருவீட்டாரும் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Forced marriage to a man 22 years older than her Young woman cries at the wedding